×

சேலம் வனப்பகுதியில் இன்று பட்டாம் பூச்சிகள் கணக்கெடுப்பு

சேலம்: சேலம் வனப்பகுதியில் பறவை மற்றும் பட்டாம் பூச்சிகள் கணக்கெடுப்பு இன்றும் நாளையும் நடக்கிறது. சேலம் வன கோட்டத்திற்கு உட்பட்ட தம்மம்பட்டி, ஆத்தூர், கல்வராயன் மலை, டேனிஷ்பேட்டை, ஏற்காடு, மேட்டூர் உள்ளிட்ட 9 வனச்சரகங்கள் உள்ளது. இந்த பகுதியில் பறவைகள் மற்றும் பட்டாம் பூச்சி கணக்கெடுக்கும் பணிகள் இன்று தொடங்குகிறது. இதற்காக 150 தன்னார்வலர்கள் மற்றும் வன பணியாளர்கள் கொண்ட குழுக்ககள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பின் பணியில் ஈடுபட்ட 80 இயற்கை ஆர்வலர்களும் இதில் இணைந்துள்ளனர். இந்த கணக்கெடுப்பு பணிக்கு தன்னார்வலர்கள் மற்றும் வன பணியாளர்கள் கணக்கெடுப்பு முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து பயிற்சி நேற்று வழங்கப்பட்டது. சமூக வனத்துறைக்கான மண்டல வன அலுவலர் பிரபா கலந்து கொண்டார். கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு அதற்கான பணிகள் குறித்து விளக்கினார்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் வனப்பகுதியில் பறவைகள் மற்றும் பட்டாம் பூச்சி கணக்கெடுக்கும் பணிகள் இரண்டாவது முறையாக நடக்கிறது. இந்த கணக்கெடுப்பு பணிக்கு 150 தன்னார்வலர்கள் மற்றும் வன பணியாளர்கள் கொண்ட குழுக்ககள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களை 16 குழுக்களாக பிரிக்கப்பட்டு அந்தந்த முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். தொடர்ந்து 15ம் தேதி மற்றும் 16ம் தேதி ஆகிய இரு தினங்கள் களப்பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணியில் கிடைக்கக்கூடிய தகவல்கள் 16ம் தேதி மாலைக்குள் தொகுக்கப்படும். கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 276 பறவை இனங்கள், 76 மேற்பட்ட பட்டாம் பூச்சி இனங்களை கண்டறிந்துள்ளோம்.’’ என்றார்.

Tags : Salem Forest Today , Pandemic Insects
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...