×

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம் எதிரொலி: முதல்வருடன் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப்பு

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டை சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் நடத்தப்பட்ட தடியடி தொடர்பாக முதல்வருடன் ஆணையர் சந்தித்துள்ளார். போலீஸ் நடத்திய தடியடியை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சி.ஏ.ஏ.க்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் காவல் ஆணையர் சந்தித்துள்ளார்.

வண்ணாரப்பேட்டை, மண்ணடியில் இஸ்லாமியர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து தர்ணா நடத்தினர். வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து இரவில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியை போல் சென்னையில் ஷஹீன் பாக் என்ற பெயரில் பெண்கள் வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட போது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மீது போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து போராடிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.ஏ.ஏ.வை எதிர்த்து போராடிய பெண்களை தாக்கிய போலீஸை கண்டித்து தமிழகம் இரவு முழுவதும்  சாலை மறியல் நடைபெற்றது.

Tags : protest ,Chennai Municipal Police Commissioner ,CM CAA , CAA
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...