×

வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மீது போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து போராடிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

சென்னை: வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மீது போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து போராடிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.ஏ.ஏ.வை எதிர்த்து போராடிய பெண்களை தாக்கிய போலீஸை கண்டித்து தமிழகம் இரவு முழுவதும்  சாலை மறியல் நடைபெற்றது.

விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மீது போலீஸ் தடியடியை கண்டித்து நேற்று இரவு விழுப்புரத்தில் சாலை மறியல் செய்தனர். செங்குன்றத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடிய இஸ்லாமியர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

வண்ணாரப்பேட்டை, மண்ணடியில் இஸ்லாமியர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து தர்ணா நடத்தினர். வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து இரவில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியை போல் சென்னையில் ஷஹீன் பாக் என்ற பெயரில் பெண்கள் வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட போது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திருவாரூரில் மறியல் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் நள்ளிரவில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் செய்தனர். திருவாரூரில் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்ட 450 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, அடியக்கமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பத்தில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கோட்டக்குப்பத்தில் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்ட 107 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தடியடி தாக்குதலைகண்டித்து செங்கல்பட்டில் போராட்டம் நடைபெறுகிறது. விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Washermenpet ,women ,CAA , CAA
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்