×

வாலிபருக்கு கத்திக்குத்து

திருவொற்றியூர்: திருவொற்றியூர், எஸ்.பி.கோயில் தெருவை சேர்ந்தவர் விஷால்குமார் (23). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டருகே நடந்து சென்றபோது, 3 பேர் அவரை வழிமறித்து தாகாத வார்த்தையால் பேசி, தகராறு செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென விஷால்குமாரின் வயிற்றில் குத்தினார். இதையடுத்து, அனைவரும் தப்பி ஓடினர்.

இதைப்பார்த்த  அக்கம் பக்கத்தினர் விஷாலை மீட்டு திருவொற்றியூரில்  உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுனாமி குடியிருப்பை சேர்ந்த ராஜூ (23) என்பவரை கைது செய்தனர் தலைமறைவாக உள்ள, இருவரை தேடி வருகின்றனர்.

Tags : plaintiff , Shout out , plaintiff
× RELATED வாலிபர் தற்கொலை