×

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட பட்டியல் வெளியீடு சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிகப்படியாக 6.6 லட்சம் வாக்காளர்கள்

சென்னை: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2020ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. கலெக்டர் பொன்னையா வாக்காளர் பட்டியலை வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி பெற்று கொண்டார். நிகழ்ச்சியில், அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துஇருந்தனர். இதில் ஆண் வாக்காளர்கள் 19,25,755, பெண் வாக்காளர்கள் 19,71,946, திருநங்கைகள் 529 பேர் என மொத்தம்  38 லட்சத்து 98 ஆயிரத்து 230 வாக்காளர்கள் உள்ளனர்.

Tags : Kanchipuram District ,voters ,assembly constituency ,Sholinganallur , Consolidated Kanchipuram District ,List Issue Exceeding ,6.6 lakh Voters
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை...