×

பவர் கிரிட் இயக்குநராக வி.கே.சிங் பொறுப்பேற்பு

சென்னை:  பவர் கிரிட் இந்தியா நிறுவனத்தின் இயக்குநராக (பணியாளர்கள்) வினோத் குமார் சிங் பொறுப்பேற்றார்.  இவர் இதற்கு முன்பு மனித வள மேம்பாட்டு துறை பொது மேலாளராக பொறுப்பு வகித்தவர். வடகிழக்கு மாநிலங்களில் கொள்கை சீரமைப்பு உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் சிறப்பாக கையாண்டவர். அதோடு பவர் கிரிட் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றியுள்ளார். இவரது பணிக்காலத்தில்தான் பவர் கிரிட் நிறுவனத்துக்கு மகாரத்னா அந்தஸ்து கிடைத்தது.

ராஞ்சியில் சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சர்வீசஸ் கல்வி நிறுவனத்தில் பணியாளர் நிர்வாகம் தொடர்பான பட்ட மேற்படிப்பு முடித்துள்ளார். முதன் முதலாக 1985ம் ஆண்டில் அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்தில்பணியை தொடங்கினார். பவர் கிரிட் நிறுவனத்தில் 1992ம் ஆண்டு இணைந்தார் மனித வளம் உட்பட நிறுவனத்தின் வர்த்தகத்தை புதிய பரிமாணத்துக்கு எடுத்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : VK Singh , VK Singh as Director , Power Grid
× RELATED தனியார் பள்ளிகள் ஜூன் மாதம் வாங்க...