×

செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு நேரடி சேர்க்கை முகாம்

சென்னை: செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான நேரடி சேர்க்கை முகாம் வரும் 19ம் தேதி நடைபெறும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக தொழிற்பழகுநர் பயிற்சி நேரடி சேர்க்கை முகாம் வருகிற 19ம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறுகிறது. இம்முகாமில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை சார்ந்த முன்னணி தொழிற் நிறுவனங்களும் கலந்துகொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 1500க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்பப்பட்ட உள்ளன.

என்.சி.வி.டி மற்றும் எஸ்.சி.வி.டி முறையில் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.யில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத இறுதியாண்டு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் பயிற்சியாளர்கள் 8ம் வகுப்பு, 10ம்வகுப்பு மற்றும் கூடுதல் கல்வித் தகுதி உடைய மாணவர்களும் நேரடியாக அப்ரண்டீஸில் சேர்ந்து 3 முதல் 6 மாதங்கள் வரை அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியும் பெற்று, தேசிய அசல் தொழிற்பழகுநர் சான்றிதழ் ெபற்று பயன்பெறலாம்.

இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை பொதுத்துறை (அரசு) மற்றும் தனியார் நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. இந்த என்.ஏ.சி சான்றிதழ் ெபற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளுக்கு முன்னுரிமையும், வயது வரம்பில் ஓராண்டு கூடுதல் சலுகையும் உள்ளது. எனவே முகாமில் அசல் கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : admission camp ,training ,Chengalpattu Government Vocational Training Center ,Chengalpattu Vocational Training Center at Vocational Training for Direct Admission Camp , Direct admission camp , vocational training,Chengalpattu Vocational Training Center
× RELATED மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்