×

சிபிஐ மேல்முறையீடு லாலுவுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் முதல்வராக இருந்த ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழலில் ஈடுபட்டார். தியோகர் கருவூலத்தில் மோசடியாக ரூ.89.27 லட்சம் பெற்ற வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த லாலுவுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சிபிஐ சார்பில் கடந்தாண்டு ஜூலை 12ல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு நேற்று இந்த மனுவை விசாரித்தபோது, லாலுவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Tags : Lalu ,CBI , CBI Appeal, Lalu, Notice
× RELATED சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு