×

திண்டிவனம் அருகே பாலியல் சித்ரவதைக்குள்ளான சிறுமி உயிரிழப்பு

திண்டிவனம்:  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த சகோதரிகளான 9 வயது, 7 வயது சிறுமிகள் தாய், தந்தை பிரிந்து சென்றுவிட்ட நிலையில் தனது பாட்டி பராமரிப்பில் வசித்து வந்தனர். இதையடுத்து புதுச்சேரியில் வசித்து வந்த தாயார் இருவரையும் தன்னுடன் அழைத்து சென்றார். புதுச்சேரியில் உள்ள ஒரு பள்ளியில் இருவரும் சேர்க்கப்பட்டு பள்ளிக்கு சென்ற நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.  இதையடுத்து அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் அவரது சகோதரிக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. அதில், அவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. பின்னர் இவ்விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நலக்குழுவில் புகார் தெரிவிக்கப்பட்டு, சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர்.  

அந்த அறிக்கை விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனடிப்படையில் பிரம்மதேசம் போலீசார், போக்சோ பிரிவின்கீழ் 15 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமிகள் இருவரும் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் 7 வயது சிறுமி நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தார். இறப்புக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு இதுதொடர்பான மேல் விசாரணை நடைபெறும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Tindivanam ,Tortoise , Tindivanam, Sexuality, Minor Death
× RELATED திண்டிவனம் அருகே 13 வயது சிறுமியிடம்...