கோவை: கோவையில் கடந்த 14.2.1998ம் தேதி தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர். இதன் நினைவு நாளான நேற்று இந்து அமைப்புகள் சார்பில் கோவையில் பேரணி நடைபெற்றது. பின்னர் தபால் நிலையம் அருகே குண்டு வெடிப்பில் பலியானோருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
