×

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் டெல்லிக்கு மாற்றம் : கொலீஜியம் உத்தரவு

சென்னை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான கொலீஜியம் கடந்த 12ம் தேதி கூட்டம் நடத்தியது. இதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள பி.டி.ஆஷா, என்.நிர்மல்குமார், சுப்பிரமணியம் பிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பி.புகழேந்தி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து முடிவெடுத்தனர். இதற்கான உத்தரவு நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்டது.

இதேபோல், நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சுப்பிரமணி பிரசாத்தை டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வது தொடர்பாகவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான கொலீஜியம் அவரை பணியிடம் மாற்றம் செய்து, நேற்று உத்தரவை வெளியிட்டது. இவர் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டதும். நேற்று முந்தினம் நிரந்திர நீதிபதியாக நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 55 பேர் இருந்த நிலையில் தற்போது ஒருவர் டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் எண்ணிக்கை 54ஆக குறைந்துள்ளது.

Tags : Subramanian Prasad ,Madras High Court ,Delhi Madras High Court ,Delhi , Madras High Court judge Subramanian Prasad, shifted to Delhi
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு