×

கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு மட்டும் அழைப்பு

புதுடெல்லி: டெல்லி முதல்வராக 3வது முறையாக பதவியேற்க உள்ள அரவிந்த் ெகஜ்ரிவால், பிரதமர் மோடியை விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, டெல்லியில் உள்ள ராம லீலா மைதானத்தில் நாளை காலை 10 மணிக்கு நடக்கும் பதவியேற்பு விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார். இது, டெல்லிக்கான சிறப்பு விழா என்பதால் வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில், பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் நேற்று அளித்த பேட்டியில், ‘`பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது தவிர டெல்லியில் உள்ள 7 எம்பி.க்கள் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8 பாஜ எம்எல்ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

Tags : Modi ,Kejriwal ,swearing-in , PM Modi's , Kejriwal's swearing-in
× RELATED கெஜ்ரிவாலை விடுதலை செய்யக்கோரி...