×

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபிரசாத் மரணம்

தக்கலை:குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள இடைக்கோடை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (67).  இவர் கடந்த 2001  சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில், பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். ஜெயலலிதா அமைச்சரவையில் மீன் வளத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தார். தக்கலையில், குடும்பத்துடன் வசித்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் நேற்று மரணம் அடைந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

Tags : Rajendra Prasad ,Death , Death ,former Minister Rajendra Prasad
× RELATED நீலகிரியில் பிரதமர் மோடிக்கு எதிராக பேசியவர் குத்திக் கொலை