×

சில்லி பாயின்ட்...

*  இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ள நியூசி. வீரர் ராஸ் டெய்லர் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட்டிலும் தலா 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற உள்ளார்.
* ஐபிஎல் டி20 தொடரின் 2020 சீசன் தொடக்கத்தையொட்டி (மார்ச் 29) ஐசிசி உயர்நிலைக் கூட்டத்தை (மார்ச் 27-29) ஒத்திவைக்க வேண்டும் என பிசிசிஐ விடுத்த வேண்டுகோளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்துள்ளது.
* ஆசிய குழு பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் கால் இறுதியில் 3-2 என்ற கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.
* மகளிர் டி20 போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 4வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
* ரஞ்சி கோப்பை தொடரின் கால் இறுதியில் விளையாட பெங்கால், கர்நாடகா அணிகள் தகுதி பெற்ற நிலையில், டெல்லி அணி பரிதாபமாக வெளியேறி உள்ளது.
* தங்கள் அணி வீரர்கள் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
* யு-19 கூச் பெகர் கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் விதர்பா அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பரோடா அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.Tags : player ,Ross Taylor , The player is Ross Taylor
× RELATED சில்லி பாயின்ட்…