×

அதிமுக ஆட்சி மாநில நிதி நிர்வாகத்தில் படுதோல்வி அடைந்துவிட்டதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக ஆட்சி மாநில நிதி நிர்வாகத்தில் படுதோல்வி அடைந்துவிட்டதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசின் மொத்த கடனை ரூ.4.56 லட்சம் கோடியாக்கி ஒவ்வொருவர் தலையிலும் ரூ.57,000 கடன் சுமையை ஓ.பி.எஸ் ஏற்றிவிட்டார். தமிழகத்தின் நிதி நெருக்கடியால் தமிழக மக்கள் பெரும் மனக்கலக்கத்தில் உள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.14,000 கோடியில் இருந்து ரூ.25,000 கோடியாக அதிகரித்துவிட்டதாக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். நிதி மேலாண்மையில் நிதி அமைச்சர் மற்றும் முதலமைச்சருக்கு திறமை இல்லை என்பதையே பற்றாக்குறை காட்டுகிறது.

Tags : Stalin ,state ,AIADMK , Stalin
× RELATED தேர்தல் களத்தில் அதிமுகவை சந்திக்க...