×

நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி : நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வினய் சர்மா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. வினய் சர்மாவின் உடல்நிலை குறித்த அறிக்கையின் அடிப்படையிலேயே அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததாகவும் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வினய் சர்மா முன்வைத்த வாதங்களை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்‌சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து அவர்கள் அடுத்தடுத்து சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் தாக்கல் செய்ததால், தண்டனை நிறைவேற்றுவது தள்ளி போகிறது. இந்நிலையில், கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததற்கு எதிராக வினய்குமார் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கருணை மனுவை ஜனாதிபதி உரிய முறையில் ஆராயவில்லை என்பதை ஏற்க முடியாது. வினய்சர்மாவின் மருத்துவ அறிக்கை, கருணை மனுவுடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குற்றவாளி நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் உள்ளார். இதனால், மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,Vinay Sharma , Nirbhaya, mercy petition, Vinay Sharma, petition, dismissal, Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...