×

காதலர் தினத்தை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் தினமாக கொண்டாட வேண்டும்

தா.பழூர்: காதலர் தினத்தை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் தினமாக கொண்டாட வேண்டும் என சிவசந்திரன் மனைவி காந்திமதி கூறினார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட சொகுசு வாகனத்தை மோத செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து ஒரு ஆண்டுகள் முடிவுற்ற நிலையில்

முதலாம் ஆண்டு நினைவு தினம் நாளை மறுநாள் அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் அவரது சமாதியில் மணிமண்டபம் கட்டப்பட்டு திறப்பு விழாவும் நடைபெற உள்ளது. இதற்காக முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து சிவச்சந்திரன் மனைவி காந்திமதி கூறும்பொழுது, பிப்ரவரி 14 காதலர் தினத்தை புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 44 ராணுவ வீரர்கள் தினமாக அரசு அறிவிக்க வேண்டும்.

இதனால் ராணுவத்தில் தனது நாட்டை காக்க வீரர்கள் செய்த தியாகம் பற்றி ஒவ்வொருவரும் அறிய செய்ய வேண்டும். மேலும் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சிலை திறக்கப்படும் என்று அறிவித்து ஒரு ஆண்டுகள் ஆகியும் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

தங்களுக்கென்று அரசு எந்த செயலையும் செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்கள் சிலையை உடனே நிறுவ வேண்டும். அப்போதுதான் அந்த மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் இருந்தார்கள் என்பது குறித்தும், அவர்கள் தாய் நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள் என்பது தெரியவரும். என் கணவன் கூறியதுபோல் எனது குழந்தைகளை வளர்த்து எனது மகனை இராணுவத்திற்கும், மகளை ஐஏஎஸ் ஆகவும் ஆக்குவது எனது கனவு என்று கூறினார்.

Tags : attack ,soldiers ,deaths ,Pulwama , Valentine's Day should be celebrated as the day of the deaths of the soldiers killed in the Pulwama attack
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...