×

உழவர்- அதிகாரி திட்டம், புதிய உணவுப் பூங்காக்கள்... வேளாண்துறையில் முக்கிய அறிவிப்புகள்

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது  அவர் உரையில் கூறிய சிறப்பு அறிவிப்புகள் குறிப்புகளாக பின்வருமாறு...

*அரசு தமிழ்நாடு உழவர் உற்பத்திக் கொள்கை மூலம் மேலும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.

*உழவர்- அதிகாரி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

*கரும்பு விவசாயம் நுண்ணீர் பாசனத் திட்டங்களுக்கு 75 கோடி ஒதுக்கீடு

*பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு 1700 கோடி ஒதுக்கீடு

*திருந்திய நெல் சாகுபடி முறை 27.18 லட்சம் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்படும்

*தென் மாவட்டங்களில் 70 கோடி ருபாய் செலவில் உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

*உழவர் சந்தைகள், கூட்டுறவு நிறுவனங்கள் அதிகரிக்கப்படும். தென்காசியில் எழுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்.

*டன் ஒன்றுக்கு ரூ.100 என்கிற வீதத்தில் அரவைக் கால போக்குவரத்து மானியம் வழங்க ரூ.110 கோடி

*புதிதாக 45 உழவர் - உற்பத்தியாளர்கள் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்



Tags : food parks ,announcements , Budget, Finance Minister, O Paneer Wealth, filed
× RELATED 2024-25ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி...