×

கஜா புயலால் இடிந்த கண்காணிப்பு கோபுரம் புதுப்பிக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

வேதாரண்யம்: கஜா புயலால் இடிந்த கண்காணிப்பு கோபுரம், புதுப்பிக்கப்படாததால், சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பறவைகளை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் 36 சதுர கிலோ மீட்டர் பரப்பில் பரந்து விரிந்துள்ள பசுமைமாறா காடுகளை கொண்டது. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் புள்ளிமான், காட்டுபன்றி, குரங்கு, முயல், வெளிமான், நீர்மட்ட குதிரை, போன்ற விலங்குகள் உள்ளன. மேலும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மழை காலத்தில் இந்த பகுதியில் உள்ள சதுப்பு நிலபகுதிக்கு 257 வகையான வெளிநாட்டு, உள்நாட்டு பறவைகள் தங்கி உணவு அருந்தி மீண்டும் சீசன் முடிந்தவுடன் அந்தந்த நாடுகளுக்கு பறவைகள் திரும்பி செல்வது வழக்கம்.

இந்த வன விலங்குகளையும், பறவைகளையும் பார்வையிட வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயனிகள் ஆண்டு முழுவதும் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயனிகளுக்கு வனத்துறை சார்பில் வன விலங்குகளையும் பறவைகளையும் பார்வையிட கண்காணிப்பு கோபுரம், பைனாகுலர் வழிகாட்டி, தங்கும் இடம் போன்ற பல்வேறு வசதிகளை செய்திருந்தனர்.

இந்நிலையில் கஜா புயலால் வனப்பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் சேதமடைந்துவிட்டது. கடந்த ஒராண்டாகியும் முனியப்பன் ஏரியில் இடிந்தவிழுந்த கண்காணிப்புகோபுரம் அகற்றப்படாமல் அப்படியே காட்சி பொருளாக வைத்துள்ளனர். பறவை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள், கண்காணிப்பு கோபுரம் இல்லாததால் பறவைகளின் அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே இடிந்த கோபுரத்தை அகற்றிவிட்டு புதிதாக கண்காணிப்பு கோபுரம் கட்டவேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


* கடந்த ஒராண்டாகியும் முனியப்பன் ஏரியில் இடிந்தவிழுந்த கண்காணிப்புகோபுரம் அகற்றப்படாமல் அப்படியே காட்சி பொருளாக வைத்துள்ளனர்
* பறவை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள், கண்காணிப்பு கோபுரம் இல்லாததால் பறவைகளின் அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.



Tags : watch tower ,storm ,Gaja ,storm tourists , The watch tower collapsed by the Gaja storm Tourists disappointed with not renewing
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; 148.54 கோடி...