×

சேலத்தில் புதிதாக இரண்டு தொழிற்பேட்டைகள் அமைக்க தமிழக அரசு திட்டம்

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று கூறினார். மேலும் உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது
என்றும் பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.  மேலும் அவர் உரையில் கூறியது குறிப்புகளாக பின்வருமாறு...
 
*சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கிக் கடனுதவியுடன் ரூ.6448 கோடி ஒதுக்கீடு.

*சேலத்தில் புதிதாக இரண்டு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். சேலத்தில் புத்தராகவுண்டம்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் சிப்காட் கொண்டு வரப்படும்

*தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு

*புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

*கைத்தறி மற்றும் ஜவுளித்துறைக்கு ரூ.1224 கோடி ஒதுக்கப்படும்

*தமிழ்நாட்டின் மாநில குடும்பத் தரவு திட்டத்தை செயல்படுத்த ரூ.47.50 கோடி ஒதுக்கீடு

Tags : workshops ,Government ,Tamil Nadu ,Salem , Budget, Finance Minister, O Paneer Wealth, filed
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...