×

சாலைப்பாதுகாப்பிற்கு தனிப்பிரிவு உருவாக்கப்படும் : தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்ற சிறப்பு அறிவிப்புகள்!!

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று கூறினார். மேலும் உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது
என்றும் பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.  மேலும் அவர் உரையில் கூறியது குறிப்புகளாக பின்வருமாறு...
 
*ஊரக சாலை மேம்பாடு திட்டத்திற்கு ரூ.1400 கோடி ஒதுக்கீடு

*சாலைப்பாதுகாப்பிற்கு தனிப்பிரிவு உருவாக்கப்படும்.

*நகராட்சி நிர்வாகம் சார்பில் கடன் பத்திரங்கள் வெளியிட்டு நிதி திரட்டப்படும்

*ரூ.3831 கோடி செலவில் தமிழ்நாடு நீடித்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டம்

*தமிழ்நாடு நீடித்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஈரோடு, வேலூர், ஓசூர் மாதிரி நகரங்களாக தேர்வு

*நகராட்சி, மாநகராட்சிகளில் பாதாளச்சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற ரூ.406 கோடி ஒதுக்கீடு

*சென்னை பெருநகர மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

*அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்படுத்த லாபநோக்கமற்ற சிறப்பு நோக்கு முகமை அமைக்கப்படும்

*சென்னை பொருளியல் பள்ளிக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் எனும் அந்தஸ்து வழங்கப்படும்

Tags : Budget, Finance Minister, O Paneer Wealth, filed
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...