×

நேருவின் முதல் அமைச்சரவை பட்டியலில் படேல் இருந்தாரா?

புதுடெல்லி: வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு தவகல் வெளியிட்டிருந்தார். வல்லபாய் படேலுடன் நெருங்கி பணியாற்றிய மூத்த அரசு அதிகாரி வி.பி மேனனின் வாழ்க்கை வரலாறு பற்றி நாராயணி பாசு என்பவர் புத்தகம் எழுதியுள்ளார். இதை ஜெய்சங்கர் வெளியிட்டார். இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த அவர், ‘கடந்த 1947ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட முதல் அமைச்சரவை பட்டியலில் படேலின் பெயர் இடம் பெறுவதை நேரு விரும்பவில்லை என்பதை இந்த புத்தகத்தை படித்தது அறிந்து கொண்டேன்,’ என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு டிவிட்டரில் பதில் அளித்த வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா, ‘இது கட்டுக்கதை. இது போன்ற போலி செய்திகளை பரப்புவது வெளியுறவு அமைச்சரின் வேலை இல்லை. இந்த பணியை பாஜ ஐ.டி பிரிவினரிடம் விட்டு விட வேண்டும்,’ என கடுமையாக விமர்சித்தார்.  இதற்கு மீண்டும் பதில் அளித்துள்ள ஜெய்சங்கர், ‘சில வெளியுறவு அமைச்சர்கள் புத்தகத்தை படிக்கின்றனர். இதேபோல், சில பேராசிரியர்களும் படிப்பது, நல்ல பழக்கமாக இருக்கலாம். நான் நேற்று வெளியிட்ட புத்தகத்தையே படிக்க பரிந்துரைக்கிறேன்,’ என குறிப்பிட்டார்.

இதோடு இந்த சண்டை முடியவில்லை. கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி படேலுக்கு நேரு எழுதிய கடிதத்தை டிவிட்டரில் வெளியிட்டார் குஹா. அதில், அமைச்சரவையில் சேர்வதற்கு படேலுக்கு அழைப்பு விடுத்துள்ள நேரு, அவரை அமைச்சரவையின் வலுவான தூண் என குறிப்பிட்டுள்ளார்.  ‘இதை யாராவது ஜெய்சங்கரிடம் தயது செய்து காட்ட முடியுமா?’ என டிவிட்டரில் குஹா குறிப்பிட்டுள்ளார்.  அதோடு விடாமல், ‘சார்... நீங்கள் ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் பிஎச்டி பட்டம் பெற்றவர். நீங்கள் நிச்சயமாக என்னை விட அதிக புத்தகங்கள் படித்திருப்பீர்கள்.

அவற்றில் படேலுக்கு, நேரு எழுதிய கடிதமும் இடம் பெற்றிருக்கலாம். அந்த புத்தகங்களை மீண்டும் படியுங்கள்,’ என ஜெய்சங்கரை கிண்டல் செய்துள்ளார் குஹா. ராமசந்திரா குஹா தவிர, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் ஜெய்சங்கர் குறிப்பிட்டதை போலி செய்தி என கூறி, ஆதாரம் வெளியிட்டுள்ளனர்.

Tags : Patel ,Nehru ,Cabinet , Nehru's first cabinet Was Patel on the list?
× RELATED முகவரி கேட்பதுபோல் நடித்து ஆட்டோவில்...