×

எல்ஐசியுடன் இணைந்து புரட்சித் தலைவி அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் : ஓ பன்னீர் செல்வம் உறுதி

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று கூறினார். மேலும் உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது
என்றும் பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.  மேலும் அவர் உரையில் கூறியது குறிப்புகளாக பின்வருமாறு...

*தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டத்தால் அவசர சிகிச்சை பிரிவு உயிரிழப்பு குறைந்துள்ளது

*8.3 சதவீதமாக இருந்த அவசர சிகிச்சை பிரிவு உயிரிழப்பு 2.7 சதவீதமாக குறைந்துள்ளது

*ஊரக உள்ளாட்சிகளில் முதலமைச்சரின் கிராம தன்னிறைவு வளர்ச்சி திட்டம் என்ற புதிய 5 ஆண்டு தன்னிறைவு திட்டம் விரைவில் அறிமுகம்

*எல்ஐசியுடன் இணைந்து புரட்சித் தலைவி அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம்

Tags : Revolutionary Leader Mother Accident ,LIC , Budget, Finance Minister, O Paneer Wealth, filed
× RELATED கொரோனாவை எதிர்த்துப் போராட...