×

தாம்பத்திய உறவில் கணவருக்கு விருப்பம் இல்லை தாலியை கழற்றி வைத்து புதுப்பெண் ஓட்டம்

கடவூர்: கரூர் அருகே திருமணமாகி 3 மாதமாகியும் தாம்பத்தியம் உறவில் கணவருக்கு விருப்பம் இல்லாததால் புதுப்பெண் தாலியை கழட்டி வைத்து விட்டு மாயமானார். கரூர் மாவட்டம் தரகம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (27). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிரைவராக பணிபுரியும் இவருக்கும், வடமதுரை பிலாத்கிராமத்தை சேர்ந்த மாரியாயி (24) என்பவருக்கும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) கடந்த நவம்பர் 1ம் தேதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாரியாயின் தாலி மற்றும் தோடு, மூக்குத்தி உள்ளிட்ட தங்க நகைகள் மட்டும் வீட்டில் இருந்தது. ஆனால் அவரை மட்டும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சண்முகம், சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எஸ்எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி வழக்குப் பதிந்து சண்முகத்திடம் முதல் கட்ட விசாரணை நடத்தினார். விசாரணையில் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சண்முகம் அடிக்கடி வீட்டுக்கு வருவதில்லை. மனைவியுடன் நெருக்கமாக இல்லை என்றும் தெரிகிறது. திருமணம் ஆனதில் இருந்தே அவர் தாம்பத்தியதில் நாட்டம் கொள்ளவில்லையாம்.

இதுபற்றி கணவரிடம், அவரது மனைவி பலமுறை கேட்டும் அவர் சரியான பதில் சொல்லவில்லை. இதனால் விரக்தி அடைந்த மாரியாயி, அடிக்கடி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு போய்விடுவாராம். அடிக்கடி மகள் வீட்டுக்கு கோபித்துக்கொண்டு வந்ததால் அவர்கள் விசாரித்தபோது கணவரிடம் உள்ள பிரச்னை தெரியவந்தது. நாளடைவில் சரியாகவிடும் என அவர்களும் மகளை சமாதானபடுத்தி கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த விரக்தியின் காரணமாகவே மாரியாயி தனது தாலியை கழற்றி வைத்து விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவர் தாய் வீட்டுக்கு சென்றாரா?, அல்லது வேறு எங்காவது சென்றாரா என விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் மாரியாயி வீட்டை விட்டு சென்றதற்கு தாம்பத்ய உறவு மட்டுமே காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்றும் விசாரித்து வருகிறோம் என்றனர்.

Tags : The husband has no choice in the relationship Take off the thali and keep the fresh flow
× RELATED சென்னை பெருங்களத்தூரில் தனது வயதான...