×

ரூ.235 கோடி செலவில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படும் : தமிழக பட்ஜெட்டில் மீன்வளத்துறை அறிவிப்புகளின் முழு விவரம்

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று கூறினார். மேலும் உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது
என்றும் பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.  மேலும் அவர் உரையில் கூறியது குறிப்புகளாக பின்வருமாறு...

*மீனவர்களுக்கான மீன் பிடித்தடைக்கால சிறப்பு நிதி உதவிக்கு ரூ.298 கோடி ஒதுக்கீடு

*4997 படகுகளில் ரூ.18 கோடி செலவில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும்

*விழுப்புரம் அழகன் குப்பம் மற்றும் செங்கல்பட்டு ஆலம்பரைக்குப்பத்தில் ரூ.235 கோடி செலவில் மீன் பிடித்துறைமுகங்கள்

*நாகை ஆறுகாட்டுத்துறையில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித்துறைமுகம்

*மீன்வளத்துறை அமைச்சகத்திற்கு ரூ.1230 கோடி ஒதுக்கீடு

Tags : Budget, Finance Minister, O Paneer Wealth, filed
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...