×

கோடைக்கு முன்பே ஏற்காடு மலைப்பாதையில் காய்ந்து வரும் மரங்கள்

சேலம்: ஏற்காட்டில் கோடைக்கு முன்பே மலைப்பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்து வருகின்றன. மரங்களில் இலைகள் இல்லாமல் மொட்டையாக காட்சியளிக்கின்றன. இதனால் இயற்கை ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதைதவிர பொங்கல், தீபாவளி பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.கடந்தாண்டு பருவமழை கை கொடுத்ததால் ஏற்காட்டில் காய்ந்த மரங்கள் பசுமையாக மாறின.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலத்தில் வெயிலின் தாக்கம் மெல்ல, ெமல்ல அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த இரண்டரை மாதமாக மழை இல்லாததால் ஏற்காடு மலைப்பாதையில் கோடைக்கு முன்பே மரங்கள் காய்ந்து வருகின்றன.  இதனால் ஏற்காடு மலைப்பாதை கொஞ்சம், ெகாஞ்சமாக பசுமையை இழந்து வருகிறது. இதமான சீதோஷ்ண நிலை மாறி, கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது பள்ளிகளுக்கு தேர்வுகள் தொடங்க இருப்பதால், ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


இயற்கை ஆர்வலர்கள் கவலை
தண்ணீர் இன்றி குரங்குகள் அவதி
ஏற்காட்டில் ஆயிரக்கணக்கில் குரங்குகள் உள்ளன. மழைக்காலத்தில் ஏற்காட்டில் மலைப்பாதையில் ஆங்காங்கே தண்ணீர் ஓடும். ஆனால் கோடைகாலத்தில் மலைப்பாதையில் தண்ணீர் வருவது குறைந்துவிடும். இந்த நேரங்களில் சாலையோரம் தடுப்புச்சுவற்றில் உள்ள தொட்டிகளில் குரங்குகளுக்கு தண்ணீர் விடப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலைப்பாதையில் அமைக்கப்பட்டிருந்த ெதாட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதன் காரணமாக குரங்குகள் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றன. குரங்குகளின் தாகம் தீர்க்க மீண்டும் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



Tags : highway ,Yercaud ,Yercaud Mountain , Even before the summer Trees on the Yercaud Mountain Pass
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...