×

கீழடியில் அகழ்வைப்பகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கீடு, நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று கூறினார். மேலும் உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது
என்றும் பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.  மேலும் அவர் உரையில் கூறியது குறிப்புகளாக பின்வருமாறு...

*கீழடியில் அகழ்வைப்பகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கீடு

*போக்குவரத்து துறைக்கு ரூ.2716.26 கோடி ஒதுக்கீடு

*சென்னை பெங்களூர் தொழில்வடத்திட்டத்தின் கீழ் பொன்னேரியில் 21,966 ஏக்கரில் தொழில் முனைய மேம்பாட்டு திட்டம்

*சென்னை - கன்னியாகுமரி இடையே பொருளாதார பெருவழிச்சாலை திட்டம்

*மாநிலங்களுக்கு இடையிலான நிதிப்பகிர்வில் தமிழகத்தின் பங்கு 4.789 சதவீதமாக உயர்வு

*வருவாய் பற்றாக்குறை மாநியமாக ரூ.4025 கோடி வழங்க 15வது நிதிக்குழு பரிந்துரை

*நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

*1,12,876 தனி வீடுகள், 65,290 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்

*ரூ.504 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள தமிழ்நாடு

*5 புதிய மாவட்டங்களில் ரூ.550 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகம் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்படும்

*குடிமராமத்து திட்டத்துக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு

Tags : Budget, Finance Minister, O Paneer Wealth, filed
× RELATED பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய...