×

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி எம்பி நிதியமைச்சராக நியமனம்

லண்டன்: இங்கிலாந்து நிதியமைச்சராக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.   இங்கிலாந்தில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் பழமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சி வெற்றி பெற்று போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமரானார்.  அவர் தற்போது தனது அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார். இதில், யார்க்‌ஷயர் மாகாணத்தின் ரிச்மாண்ட் பகுதி எம்பி.யான ரிஷி சுனக், நிதியமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதாவை மணந்தவர். ரிஷி சுனக் இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்தவர்.  ஆக்ஸ்போர்ட், ஸ்டாண்ட்போர்டு பல்கலைக் கழகங்களில் பயின்றவர். இதற்கு முன் இவர் நிதித் துறையில் தலைமை செயலாளராக இருந்தார். இவரை நிதி அமைச்சராக்க இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.




Tags : Indian ,UK ,Finance Minister , UK, Indian Origin MB, Finance Minister
× RELATED டாப் 10 இந்திய பணக்கார நடிகைகள்! | Dinakaran Exclusive.