×

ஆந்திர மாநிலத்தில் தனியார் பள்ளி, கல்லூரி பஸ்களை மக்கள் வசதிக்காக இயக்க முடிவு: முதலில் விசாகப்பட்டினத்தில் செயல்படுத்த அரசு திட்டம்

திருமலை: ஆந்திர மாநில  நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் அங்கிருந்து அரசு நிர்வாகம் செயல்படும் என அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.  இந்நிலையில், ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் உள்ள  பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ளது. தலைநகராக அறிவிக்கப்பட்ட பிறகு நாள்தோறும் அரசு பணிகளுக்காக வந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க கூடும். எனவே, பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்துவதற்காக தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை அழைத்து வர காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டுமே பஸ்கள் பயன்படுத்தப்படுகிறது.

மற்ற நேரங்களில் தனியார் பள்ளி, கல்லூரி பஸ்களை விசாகப்பட்டினம் நகரப் பகுதியில் பொதுமக்கள் அதிகம் சென்று வரக்கூடிய இடங்களுக்கு இயக்குவதற்கு அரசு போக்குவரத்துக் கழகத்தினர் பேச்சு நடத்தி வருகின்றனர். மேலும், சோதனை முறையில்  இந்த திட்டம் செயல்படுத்த உள்ள நிலையில் பொதுமக்கள் வரவேற்பை பொறுத்து மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு கொண்டுவர போக்குவரத்து கழகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர்.



Tags : private school ,Andhra Pradesh , ஆந்திர மாநிலம்,தனியார் பள்ளி, கல்லூரி பஸ்கள்
× RELATED பிரதமர் மோடி வரும் நிலையில் தனியார்...