×

டெல்லி தேர்தல் தோல்வியை தாழ்மையுடன் ஏற்கிறேன்: அமித்ஷா பேச்சு

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற `டைம்ஸ் நவ்’ மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா `புதிய இந்தியா; ஒரு பார்வை’ என்ற தலைப்பில் ேபசியதாவது: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்கள் அளித்த தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்கிறேன். டெல்லி தேர்தல் குறித்த எனது மதிப்பீடு தவறாகி விட்டது. இதற்காக நான் வருந்தவில்லை. நாங்கள் ேதர்தலில் போட்டியிடுவது வெற்றி தோல்விக்காக அல்ல.  டெல்லி தேர்தல் இந்திய-பாகிஸ்தான் மேட்ச் என்பது போன்ற கட்சி தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சால்தான் தேர்தல் முடிவு பாஜ.வுக்கு பாதகமாக அமைந்தது.  

இந்த தேர்தல் முடிவு, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டின் பிரதி பலிப்பல்ல. குடிமக்கள் திருத்த சட்டம் தொடர்பான போராட்டம் குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறேன். ஆனால், அந்த சட்டத்தை எதிர்ப்பதற்கான காரணம் என்ன என அறிய விரும்புகிறேன்.  குடிமக்கள் திருத்த சட்டம் தொடர்பாக யாரேனும் என்னுடன் விவாதிக்க விரும்பினால் எனது அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு 3 நாட்களுக்கு நேரம் ஒதுக்கி விவாதிப்பேன். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்தின்போது அந்த மாநில தலைவர்களை சிறை வைக்கும் முடிவு மத்திய அரசு எடுத்ததல்ல. மாநில அரசு நிர்வாகம் எடுத்த முடிவின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.  இவ்வாறு அவர் பேசினார்.

குட்டி கெஜ்ரிவால்
டெல்லியில்  ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் நாளை மறுநாள் 3வது முறையாக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க இதுவரை எந்த மாநில முதல்வருக்கும் ஆம் ஆத்மி அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளன்று நடந்த கொண்டாட்டத்தின்போது கெஜ்ரிவால் போன்று வேடமணிந்து கலந்து கொண்ட ஒரு வயது சிறுவனுக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



Tags : Amit Shah ,Delhi , Delhi election, defeat, Amit Shah
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...