×

ஜம்மு பிரிவினைவாத தலைவர் கிலானி குறித்து வதந்தி இன்டர்நெட் துண்டிப்பு

ஸ்ரீநகர்:  ஜம்முவின் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியின் உடல்நிலை குறித்த வதந்தி காரணமாக இன்டர்நெட் சேவை நேற்று நிறுத்தப்பட்டது.  ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து காரணமாக கடந்தாண்டு ஆகஸ்ட் 4ம் தேதி இரவு முதல் இன்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டது. மேலும் ஊடகங்கள், பத்திரிக்கைகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டது. ஆறு மாதங்கள் கடந்த நிலையில் தற்போது அங்கு நிலைமை சீராகி வந்தது. இந்நிலையில், பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியின் (90) உடல் நிலை மோசமாக உள்ளதாக நேற்று முன்தினம் இரவு சமூக வலைதளங்களில் வைரல் தகவல் பரவியது. இதையடுத்து,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இன்டர்நெட் சேவையும் முடக்கப்பட்டது. கிலானியின் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, ‘அவருக்கு அடிக்கடி  உடல்நிலை மோசமாகிறது என்றாலும், தற்போது அவர் நல்ல நிலையில் உள்ளார்,’ என தெரிவித்தனர்.



Tags : Gilani ,Jammu , Jammu Partition, Chairman Gilani, Internet disconnection
× RELATED ஜம்முவின் லித்தியத்தை கொள்ளையடிக்கும் பாஜ: மெகபூபா முக்தி கடும் தாக்கு