×

சீட் பிடிப்பதில் தகராறு ஓடும் ரயிலில் ஒருவர் அடித்துக்கொலை

புனே: மும்பை-பிதார் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 12.45 மணியளவில் புனே வந்தடைந்தது. அங்கு சாகர் மர்கத்(26) என்பவர் தனது மனைவி ஜோதி, தாயார் மற்றும் 2 வயது மகளுடன் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறினார். அங்கு சீட் பிடிப்பதில் ஒரு குடும்பத்துடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவர்கள் சாகர் மர்கத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். அடுத்த ஸ்டேஷன் வரும் வரையில் அவர்கள் தாக்கி உள்ளனர். ரயில் தவுண்ட் ஸ்டேஷன் வந்தடைந்ததும் சாகர் மர்கத்தின் மனைவி கீழே இறங்கி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து படுகாயத்துடன் கிடந்த சாகர் மர்கத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரை கொலை செய்ததாக 6 பெண்கள் உள்ளிட்ட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.Tags : Running train, one killed
× RELATED ரயில் மோதி முதியவர் பலி