×

ஆன்லைன் நிறுவனங்களுக்கு பியூஷ் கோயல் எச்சரிக்கை

புதுடெல்லி:  புதுடெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசியதாவது: ஒரு நிறுவனத்தின் வர்த்தகம் ₹5,000 கோடியாக உள்ளது. அந்த நிறுவனம் ₹6,000 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக கூறியுள்ளது. இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. நாட்டில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றனவா என்பது குறித்து தனது அமைச்சகம் உன்னிப்பாக ஆய்வு செய்யும். இந்தியாவில் உள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றார்.Tags : Companies , Online Companies, Push Goyal
× RELATED கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும்...