×

வரும் 28ம் தேதி வரை சென்னையில் பேரணி, கூட்டம்போராட்டங்கள் நடத்த தடை: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு

சென்னை: சென்னையில் நேற்று இரவு 8 மணி முதல் வரும் 28ம் தேதி 8 மணி வரை பேரணி, போராட்டங்கள், பொதுகூட்டங்கள் நடத்த போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அதையும் மீறி யாரேனும் போராட்டங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி மத்திய அரசை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டம், பொதுகூட்டங்கள் மற்றும் பேரணி நடந்து வருகிறது.

இதை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு 8 மணி முதல், வரும் பிப்ரவரி 28ம் தேதி 8 மணி வரை சென்னையில் காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட இடங்களான போக்குவரத்து பகுதிகள், சாலை, தெருக்கள் உட்பட எந்த இடங்களிலும் தமிழ்நாடு சிட்டி போலீஸ் சட்டம் 41ன்படி பேரணி, பொதுகூட்டம், மனித சங்கிலி, போராட்டம், சாலை மறியால் போராட்டங்கள் நடத்த போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் தடை விதித்துள்ளார். அப்படி தவிர்க்க முடியாத நிலையில் நிகழ்ச்சிகள் யாரேனும் நடத்த வேண்டும் என்றால் சவ ஊர்வலம் தவிர்த்து அனைத்து நிகழ்ச்சிகளும் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு காவல் துறையில் கடிதம் வழங்க வேண்டும். இந்த உத்தரவை மீறி யாரேனும் போராட்டம், பேரணி, பொது கூட்டங்கள் நடத்தினால் அவர்கள் மீது சிட்டி போலீஸ் சட்டம் 41ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : AK Viswanathan ,rallies ,Chennai ,Mathrubhumi , Chennai, Rally, Meetings, Protests, Commissioner AK Viswanathan
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...