×

கள்ளக்காதலை கைவிட மறுத்த தாய், காதலனுக்கு கத்திக்குத்து: மகன் உள்பட 2 பேர் கைது

அண்ணாநகர்: வில்லிவாக்கம், பாரதி நகர், 1வது தெருவை சேர்ந்தவர் அம்மு (48). இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களில் ஒரு மகன், ஒரு மகளுக்கு திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். கடைசி மகனான கணேசன் (22) என்பவருக்கு திருமணமாகாததால், தாயுடன் வசித்து வந்தார்.   அம்மு, அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் துப்புரவு வேலை செய்து வருகிறார். அதே கம்பெனியில் சூபர்வைசராக பணிபுரியும் தாம்பரத்தை சேர்ந்த கண்ணன் (32) என்பவருடன் அம்முவுக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது.  கண்ணன் அடிக்கடி அம்மு வீட்டுக்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார். இதுபற்றி அறிந்த அம்முவின் மகன் கணேசன், தாய் அம்மு மற்றும் கள்ளக்காதலனை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்களின் கள்ளக்காதல் தொடர்ந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியில் சென்றிருந்த கணேசன் வீடு திரும்பியபோது, அங்கு தாய் அம்மு தனது கள்ளக்காதலனுடன் இருந்துள்ளார். இதை பார்த்து ஆத்திரமடைந்த கணேசன், தனது மைத்துனர்  சக்திவேல் (23) என்பவருடன் சேர்ந்து, வீட்டிற்குள் புகுந்து தாய் அம்மு மற்றும் கள்ளக்காதலனை  சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பினர்.  தகவலறிந்து வந்த வில்லிவாக்கம் போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த அம்மு மற்றும் கண்ணனை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் பதுங்கி இருந்த கணேசன் மற்றும் சக்திவேலை கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.Tags : Child, mother, lover, knife, son, 2 arrested
× RELATED வேறு ஒருவருடன் தொடர்பால் பிறந்த...