×

தீவிபத்தில் தம்பதி பலி

சென்னை: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தம்பதி சுனில் சர்தார் (58) - கிருஷ்ண சர்தார் (48) சென்னை ஆயிரம் விளக்கு குலாம் அப்பாஸ் அலிகான் 2வது சாலையில் வசித்து வந்தனர். நேற்று காலை சமையல் செய்ய கிருஷ்ண சர்தார் காஸ் அடுப்பை பற்றவைக்கும் போது, காஸ் கசிந்து தீவிபத்து ஏற்பட்டது. இதில், கிருஷ்ண சர்தார் மற்றும் அவரது கணவர் சுனில் சர்தார்  ஆகியோர் உயிரிழந்தனர்.  மற்றொரு சம்பவம்: அரியலூர் மாவட்டம் மன்னகாடு பகுதியை ேசர்ந்தவர் தமிழ்குடிமகன் (34). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் அடையாறு காந்தி மண்டபம் அருகே பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்து ஆட்டோவில் ஊற்றினார். அப்போது அவர் சிகரெட் பிடித்து கொண்டு இருந்ததால் அவர் மீது தீப்பிடித்தது. படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

Tags : Couple killed ,fire
× RELATED திருவண்ணாமலை தீப மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு