வீராங்கல் கால்வாயில் கழிவுநீர் கலக்க காரணம் என்ன? மறுசீரமைப்பு செய்வதற்கான திட்ட அறிக்கை தரவேண்டும்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: வேளச்சேரி வீராங்கல் கால்வாயை மறுசீரமைப்பு செய்வதற்கான திட்ட அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.  வேளச்சேரி விரைவு சாலையில் உள்ள வீராங்கல் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ராமகிருஷ்ணன் மற்றும் சாய்பால் தாஸ் குப்தா அமர்வு முன் விசாரனைக்கு வந்தது.

அப்போது, சென்னை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி, கண்காணிப்பு பொறியாளர், பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதார அமைப்பு ஆகியோர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டனர். மேலும், கால்வாயில் கழிவுநீர் கலப்பதற்கான காரணம் என்ன, இதற்கு யார் பொறுப்பு என கண்டறிந்து, கால்வாயை சீரமைப்பதற்கான திட்டத்துடன் விரிவான அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories:

>