×

டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி மோசடியாக ரயில் டிக்கெட் விற்பனை செய்த 39 பேர் கைது: பல லட்சம் மதிப்பிலான டிக்கெட் பறிமுதல்

சென்னை: டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி ஐ.ஆர்.சி.டி.சி., இணையம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாக சிலர் டிக்கெட் முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து முறைகேட்டில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில், தெற்கு ரயில்வேயில் உள்ள 6 கோட்டத்திலும் ரயில்வே பாதுகாப்பு படையினர் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையில் டிராவல்ஸ் ஏஜென்சி வைத்து டிக்கெட் முன்பதிவு செய்யும் 39 பேர், ஐ.ஆர்.சி.டி.சி இணையத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 39 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள முன்பதிவு செய்து வைத்திருந்த 218 ரயில் டிக்கெட்கள் 600 காலவதியான டிக்கெட்கள், கம்யூட்டர்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 39 பேரில் 15 பேர் ஐ.ஆர்.சி.டி.சி அனுமதி பெற்ற ஏஜெண்டுகள் என்பதும், மீதமுள்ள 24 பேர் அனுமதி பெறாதவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.



Tags : travel agency ,traffickers , Travel agency, fraud, train tickets, arrest of 39, ticket seized
× RELATED ஊரடங்கு காலங்களில் நடந்த தீவிர...