×

கோவை சிறப்பு ரயில் நேரம் மாற்றம்

சென்னை: சென்னை- கோவை இடையே இயக்கப்படும் ரயில்கள் நேரம் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: திருவனந்தபுரம்- சென்ட்ரல் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு எக்ஸ்பிரஸ் ஜூன் 13ம் தேதி 20 நிமிடம் முன்னதாக இரவு 8 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.15 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். மேலும் சென்ட்ரல்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ஜூன் 11ம் தேதி முன்னதாக இரவு 8.55 மணிக்கு புறப்படும். அதைப்போன்று சென்னை சென்ட்ரல்- மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ஜூன் 11ம் தேதி தாமதாக 9.05 மணிக்கு புறப்படும்.

Tags : Coimbatore , Coimbatore, special train, time, change
× RELATED சிறப்பு சரக்கு ரயில் இயக்கம்