×

பிரம்பு உடைந்து குத்தியதில் மாணவிக்கு பார்வை பாதிப்பு: ஆசிரியர் மீது வழக்கு

ராதாபுரம்: கூடங்குளம் தனியார் பள்ளியில் பிரம்பு ஒடிந்து 5ம் வகுப்பு மாணவியின் கண்ணில் குத்தியதில் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பில் பாடம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த ஆசிரியர் ஆதிநாராயணன் என்பவர், மாணவி ஒருவரின் கையில் பிரம்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பிரம்பின் ஒரு பகுதி உடைந்து அருகேயிருந்த மாணவி முத்தரசி கண்ணில் குத்தியுள்ளது. இதனால் கண்ணில் வலியால் துடித்த மாணவி முத்தரசியை தலைமையாசிரியை துணையுடன் நெல்லை தனியார் கண் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் மாணவிக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து புகாரின் பேரில் கூடங்குளம்  போலீசார், ஆசிரியர் ஆதிநாராயணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Tags : student ,teacher , Cane, stab, student, visual impairment, teacher, case
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...