×

மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு: அமைச்சர் வேலுமணி வலியுறுத்தல்

புதுடெல்லி: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்படி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்தித்தார். மத்திய அமைச்சர்களை சந்தித்த பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்தபோது, ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில் 2017-18 முதல் 2019-2020க்கான செயலாக்க மானியத்தொகை ரூ.2 ஆயிரத்து 29 கோடியும், அதேப்போல் 2019-20க்கான அடிப்படை மானியத் தொகை ரூ.4 ஆயிரத்து 345 கோடியும் என மொத்தம் ரூ.6 ஆயிரத்து 374.6 கோடி தொகையை தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் கோவை விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லிக்கு நேரடியாக காலை நேரத்தில் விமான சேவை தொடங்கவும், இதேப்போல் பன்னாட்டு விமான சேவையாக கோவை முதல் துபாய் நாட்டுக்கு விமான சேவை வழங்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமனிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு என நிலுவையில் இருக்கும் 2019-20க்கான இரண்டாவது தவனைத் தொகை ரூ.2 ஆயிரது 939 கோடி, மற்றும் 10.2.2020வரையினான தொழிலாளர் ஊதியம், கட்டுமானம் மற்றும் நிர்வாக செலவீனங்கள் தலைப்பின்கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ.609 கோடி சேர்த்து மொத்தம் ரூ.3 ஆயிரத்து 548 கோடியை உடனடியாக விடுக்க வேண்டும் என மத்திய ஊரக அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதேப்போல் வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரத்துறையின் அமைச்சர் அத்தீப் சிங்கை சந்தித்து விமான சேவை தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் பரிசீலனை செய்த மத்திய அமைச்சர்கள் அது குறித்து பதிலை விரைவில் தருவதாக உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Velumani More ,Velumani ,Tamil Nadu , Union Minister of State for Human Resources, Velumani
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...