×

நாகர்கோவில்- வேளாங்கண்ணிக்கு ரயில்: ஞானதிரவியம் எம்பி ரயில்வே அதிகாரியிடம் கோரிக்கை

நாகர்கோவில்: தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க கவுரவ தலைவரும், எம்பியுமான  ஞானதிரவியம், பொதுச்செயலாளர் சூசைராஜ், தலைவர் தேவ் ஆனந்த் ஆகியோர் தென்னக  ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து பேசினர். பின்னர் அவர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில்  கூறியிருப்பதாவது: தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து  நாகர்கோவிலுக்கு வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாள் ரயில்  இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து  சென்னைக்கு செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாள் ெசல்கிறது. ெசன்ைனயில்  உள்ள மக்கள் இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன.

இதனால் எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ரயிலை இயக்க வேண்டும். இது தவிர திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாள் என்பதை வெள்ளி, சனி என்று 5 நாட்களாக  நீட்டித்து இயக்கும் நடவடிக்ைக  எடுக்கவேண்டும். அதே போல் மறுமார்க்கமாக ெசவ்வாய், புதன், வியாழன், ஞாயிறு,  திங்கள் ஆகிய 5 நாள் நாகர்கோவிலில் இருந்து ெசன்னை எழும்பூருக்கு  இயக்கவேண்டும். வெள்ளிகிழமை சென்னையில் இருந்து வரும் ரயிலை சனிக்கிழமை மாலை 5  மணிக்கு நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு இயக்க நடவடிக்கை  எடுக்கவேண்டும். ஞாயிறு மாலை வேளாங்கண்ணியில் இருந்து  நாகர்கோவிலுக்கு இயக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில்  கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட தென்னக ரயில்வே பொது மேலாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags : Velankanni ,Nagercoil ,officer ,MB Railway ,Nagercoil- Velankanni Railway , Nagercoil- Velankanni Railway, Gnanadiraviyam MB, Railway Officer Request
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு