×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிபாரிசு கடிதம் இல்லாவிட்டாலும் ரூ.200 க்கு ஒரு மெகா சைஸ் லட்டு

திருமலை: திருப்பதி கோயிலில் சிபாரிசு கடிதம் இல்லாமல் வந்தாலும் 200 ரூபாய்க்கு ஒரு பெரிய லட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. திருப்பதி  ஏழுமலையான் கோயிலில் தினமும் கல்யாண உற்சவ சேவை நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு 2 பெரிய லட்டுகள், 2 வடை  மற்றும் 5  சிறிய லட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு சிறிய லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படுகிறது. கல்யாண உற்சவத்தில் மட்டும்  பங்கேற்கும்  பக்தர்களுக்கு வழங்க கூடிய பெரிய லட்டுகள் சிபாரிசு கடிதத்தின் மூலம் ₹200 கட்டணத்தில் கோயிலுக்குள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் எந்தவித சிபாரிசு கடிதங்களும் இல்லாமல் நேரடியாக கோயிலுக்கு வெளியே உள்ள லட்டு கவுன்டரில் ரூ.200 கட்டணம் செலுத்தி பெரிய   லட்டுகளை பெறுவதற்கு தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக சோதனை முறையில் நேற்று 10 ஆயிரம் பெரிய லட்டுகளை இருப்பு வைத்து ₹200   கட்டணத்தில் விற்பனை செய்தனர். ஏற்கனவே சலுகை விலையில் 4 லட்டுகள் ₹70க்கு வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் எத்தனை சிறிய லட்டுகள்   வேண்டுமென்றாலும் ஒரு லட்டு ₹50 கட்டணத்தில் கோயிலுக்கு வெளியே உள்ள கவுன்டரில் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.Tags : Tirupati Ezumalayayan Temple ,Tirupati Ezumalayan Temple , Even though there is no letter of recommendation at Tirupati Ezumalayan temple, a mega size of Rs.
× RELATED கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில்...