×

ஜீப்பில் அமர்ந்தபடியே லாரி டிரைவர்களிடம் மாமூல் வசூலிக்கும் இன்ஸ்பெக்டர்: வீடியோ வைரலால் பரபரப்பு

பெரம்பலூர்: பெரம்பலூரில் ஜீப்பில் இருந்தபடியே தாதாவைப் போல் மாமூல் வசூலிக்கும் போக்குவரத்து ஆய்வாளரின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் நகர போக்குவரத்து ஆய்வாளராக இருப்பவர் சவுந்தரராஜன். இவர் ஜீப்பில் அமர்ந்து கொண்டே லாரி டிரைவர்களிடம் பணம் வசூலிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருக்கும் உரையாடல் பவருமாறு:
இன்ஸ்: என்ன லோடு இது?
லாரி டிரைவர்: வேஸ்ட் குட்ஸ் சார்.
இன்ஸ்: எவ்வளவு எடை இருக்கும்?
டிரைவர்: 12, 13 டன் அளவுக்கு இருக்கும்
இன்ஸ்: ஒரு டன்னுதான் கூட வருமா ? வே பிரிட்ஜ் பில் இருக்கா ?
டிரைவர்: சார் இந்தாங்க சார் பணத்தை வச்சிக்கோங்க சார்.
இன்ஸ்: லைசென்ஸக் கொடுப்பா கேஸ் போட்டுக்கலாம் எனக்கூறியதும் இன் ஸ்பெக்டர் எதிர்பார்த்த பணத்தை அந்த டிரைவர் கொடுத்துவிட்டுச் செல்கி றார். அதனை இன்ஸ்பெ க்டர் வாங்கிஎண்ணி சரி பார்த்து வைத்துத்கொள் கிறார்.
மற்றொரு டிரைவர்: சார் நூறு ரூபா கூடுதலாகூட வச்சிக்கோங்க சார், 10 நிமி ஷம், டீ குடிக்கதான் நிப்பா ட்டுனேன் சார், 1 நிமிஷம் நின்னா கூட ஓனர் சத்தம் போடுவார் சார்.
இன்ஸ்: ஓனர் கிட்ட பேசி ட்டு வந்தேன்னு தானே சொன்ன அப்புறம் என்ன.
டிரைவர்: அவரு (ஓனர்) ஆயிரம் ரூபாய் கொடுத் தாலும் உன் கை காசுல இருந்துதான் கொடுக்க னும்னு சொல்றாரு சார். எனக்கு படிக்காசே ஆயிரம் ரூபாய்தான் சார்.
இன்ஸ்: அப்புறம் எதுக்கு ஓனர் கிட்ட பேசுன.
டிரைவர்: அவரு கேஸ் போடாமல் நீயே பார்த்து குடுத் துட்டு வான்னு சொன்னாரு சார்.
இன்ஸ்: அதுக்குதான் பில்லக் கட்டச் சொன்னேன், கவர்ன்மெண்டுக்கு தானே போகுது. கட்டிட்டு போ பில்ல தரேன், வாங்கிட்டுபோ.
டிரைவர்: சார் ஓனர் வால், வால்னு சத்தம் போடுவார்.
இன்ஸ்: சரி கவர்மெண்டுக்கே கட்டிட்டு போ எனக்கூ ற அந்த டிரைவரும் கேட்ட பணத்தைக் கொடுத்து விட் டு செல்கிறார்.
இன்ஸ்: என்ன தல?
மற்றொரு டிரைவர்: சார் பணத்தை கையில வையுங்க சார், அரியலூர் தான் சார், ரெகுலரா போயிட்டு தானே இருக்கோம். உங்க ளப் பார்க்காம, நிறுத்தாம, கொடுக்காம, எப்போதா வது போயிருக்கமா, ரெகு லரா போயிட்டு இருக்க வண்டிக்கே இப்படி பண்றீங்களே சார்.
இன்ஸ்: வண்டிய நிறுத்தி ட்டேன்னுவேற சொல்றீங்க
டிரைவர் : சார் சாப்பிடவே இவ்வளவுதான் சார் இருக்கு.200 ரூவாதான் இருக்கு வாங்கிக்கோங்க சார். இவ்வாறு உரையாடல் உள்ளது. இது காவல்துறை வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Inspector ,lorry drivers ,spread , lorry drivers, Mamool charged, Inspector
× RELATED அணைக்கட்டு அருகே 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு