×

பேரூராட்சிக்குபட்ட பகுதிகளில் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பு

சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி சார்பில் 36 ஆயிரத்தி 445 மரக்கன்றுகள் நடப்பட்டன. இவற்றுக்கு வாரம் 2 முறை தண்ணீர் விட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. செயல் அலுவலர் கலையரசியின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 23 பேரூராட்சிகளிலும் ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. குறிப்பாக சின்னாளபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட காந்தி மைதானம், வி.எம்.எஸ்.காலனி, சிக்கனம்பட்டி, மேட்டுப்பட்டி, சோமசுந்தர காலனி, காமாட்சி நகர், கருணாநிதி காலனி, ஏ.டி.எஸ்.நகர், பேரூந்து நிலைய சாலை, சின்னாளபட்டியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டன. சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 12ம் தேதி வரை 36 ஆயிரத்து 445 மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்தது. தற்போது பேரூராட்சிக்கு சொந்தமான டிராக்டர்கள் மற்றும் தண்ணீர் வாகனங்கள் மூலம்  மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படுகிறது.

சின்னாளபட்டி செயல் அலுவலராக கலையரசி பொறுப்பேற்ற பின்னர், பேரூராட்சிக்கு சொந்தமான 9 இடங்களை மீட்டு அதில் வேலிகள் அமைத்து மரக்கன்றுகளை நட்டு பூங்கா அமைத்துள்ளார். இதன் மூலம் பேரூராட்சிக்கு சொந்தமான இடம் பாதுகாக்கப்பட்டதுடன், பூங்காக்கள் பூஞ்சோலையாக மாற உள்ளது. இது குறித்து செயல் அலுவலர் கலையரசி கூறுகையில், ‘‘மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆலோசனைப்படி சின்னாளபட்டியில் அதிகளவில் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். அவற்றை பாதுகாக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் ஊற்றி வருகிறோம். பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்போடு சின்னாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 36 ஆயிரத்து 445 மரக்கன்றுகளை நட்டுள்ளோம். மீட்கப்பட்ட பேரூராட்சிக்கு சொந்தமான பூங்காக்களில் அதிகளவில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதால் 6 மாதங்களில் அந்த இடம் பூஞ்சோலையாக மாறும்’’ என்றார்.

Tags : areas ,timber plants ,Maintenance area , Maintenance area, timber, watering and maintenance
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...