×

அறந்தாங்கி கடைகளில் பிளாஸ்டிக் பதுக்கி வைத்து விற்பனை: வியாபாரிகளுக்கு 37ஆயிரம் அபராதம்

அறந்தாங்கி: அறந்தாங்கி நகரில் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையையும் மீறி சிலர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து அறந்தாங்கி நகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

அதன் அடிப்படையில் நகராட்சி துப்புரவு அலுவலர், நகராட்சி ஆணையர் (பொ) முத்துகணேஷ் உத்தரவின்பேரில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சேகர், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று அறந்தாங்கி நகரில் உள்ள 2 மொத்த விற்பனை கடைகள், 5 சில்லரை விற்பனை கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு இருந்தது. இதையடுத்து நகராட்சி அலுவலர்கள் ரூ.1 லட்சம் மதிப்பிலான 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடைகாரர்களுககு ரூ.37,550 அபராதம் விதித்தனர்.

Tags : charity shops ,dealers ,Merchants , Fines, Plastics, Sales, Merchants, Fines
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...