×

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை எதிரொலி: குடிசைகளை மறைக்க 7 அடியில் சுவர் அமைக்கும் குஜராத் அரசு

அகமதாபாத்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வருகையையொட்டி, குடிசைப் பகுதி மக்களின் குடியிருப்புகளை மறைக்கும் வகையில் சுவர் கட்டப்படுவது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மனைவி மெலனியாவுடன் வரும் 24, 25ம் தேதி இரண்டு நாள் பயணமாக இந்தியா  வருகிறார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வரும் டிரம்ப், தலைநகர் டெல்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கும்  நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இதையடுத்து, குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்கள், சாலைகள் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கம் என்று   அழைக்கப்படும் மொடாரா ஸ்டேடியத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1.10 லட்சம் பேர் அமர்வதற்கான வசதிகள் இந்த அரங்கில்   உள்ளது. ஸ்டேடியத்தைச் சுற்றி, சாலைகள் போடப்பட்டு, தரைவிரிப்பு வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. ரயில்களுக்கு பெயின்ட் அடிக்கப்படுகிறது.

நடைபாதைகளில் புதிய பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்படுகின்றன. கடந்தாண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் டெக்சாஸில் பிரதமர் மோடி பங்கேற்ற ‘ஹவுடி   மோடி’ நிகழ்ச்சியை போன்று ஒரு நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிப். 24ம் தேதி மாலை நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வின் தலைப்பாக ‘கெம் சோ   மிஸ்டர் பிரசிடென்ட்’ என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமானநிலையத்துக்கு அருகிலுள்ள குடிசைவாரிய  குடியிருப்புகளை மறைக்கும் வகையில் ஏழு அடி உயரத்துக்கு அரைகிலோ மீட்டர் தூரத்துக்கு சுவர் ஒன்றை அகமதாபாத் மாநகராட்சி கட்டி  வருகிறது.அகமதாபாத்திலிருந்து காந்திநகர் நோக்கி செல்லும் திசையில் சுவர் கட்டப்பட்டுள்ளது. அந்த குடிசைவாரியக் குடியிருப்பில் பத்துவருடங்களுக்கும்  மேலாக 500 வீடுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். மக்களின் ஏழ்மை நிலையை ட்ரம்ப் பார்க்கக் கூடாது என்பதற்காக இந்தச் சுவர்  கட்டப்படுகிறது. இதற்போது, இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Tags : Trump ,US ,visit ,government ,Gujarat , US President Trump echoes visit of Gujarat government
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்