×

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது : அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

சென்னை : படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது என்று அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.சட்டப்பேரவையிலும் மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று செய்வது வேறாக அதிமுக இரட்டை வேடம் போடுவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மூடப்பட்ட அனைத்து மதுக்கடைகளை திறப்பு

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 2,500 மதுக்கடைகளை மூடிய தமிழக அரசு அதே எண்ணிக்கை அளவுக்கு புதிய கடைகளை திறந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவித்த அதிமுக அரசு, அதனை செயல்படுத்தும் வகையில் 1000 மதுக்கடைகளை மூடியது. இது தவிர உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த மேலும் 1,500 மதுக்கடைகளை மூடும் கட்டாயம் ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட மூடப்பட்ட கடைகளுக்கு மாற்றாக சர்ச்சைக்கு இடம் இல்லாத இடங்களில் புதிய மதுக்கடைகளை திறப்பதில் டாஸ்மாக் தீவிரம் காட்டியது.

அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் 2,295 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இது தவிர மேலும் 200 கடைகளை திறக்கும் நடவடிக்கையை டாஸ்மாக் தீவிரப்படுத்தி உள்ளது. மூடப்பட்ட மது கடைகள் எண்ணிக்கைக்கு இணையாக புதிய கடைகளை டாஸ்மாக் திறந்து இருப்பதன் மூலம் அதிமுக அரசின் மதுவிலக்கு கொள்கை கேள்விக்குறியாகி விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை 5,197 ஆக அதிகரித்து இருப்பது போன்றே வருவாயும் கணிசமாக உயர்ந்துள்ளது.

ஸ்டாலின் ட்வீட்


இது தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,கடந்த 3ஆண்டில் 2000-க்கும் மேலான #TASMAC புதிதாக திறக்கப்பட்டுள்ளன. மேலும் 200 கடைகள் திறக்கப்பட உள்ளனவாம். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? சட்டப்பேரவையிலும்,மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று; செய்வது வேறு என அதிமுக போட்டு வரும் இரட்டை வேடம் இது! என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Stalin ,government ,AIADMK , Tamil Nadu Government, Liquor Store, AIADMK Govt.
× RELATED ஏழைகளின் சுருக்குப் பையில் உள்ள...