×

மணிமுத்தாறு அருவிச்சாலையில் தார் அமைக்கும் பணிகள் தீவிரம்: ஒரு வாரத்தில் நிறைவு பெற வாய்ப்பு

அம்பை,: நெல்லை மாவட்ட சுற்றுலாதலங்களில் மணிமுத்தாறு அருவிக்கென தனி இடமுண்டு. மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவதால் எப்போதும் கூட்டம் அலைமோதும். மணிமுத்தாறு அணையும், அதனை சார்ந்த பசுமையும், குளிர்ந்த காற்றும், மணிமுத்தாறில் காணப்படும் பூங்கா ஆகியவை சுற்றுலா பயணிகளை குதூகலமூட்டும்.  மணிமுத்தாறு பகுதி சூழலியல் சுற்றுலாதலமாக விளங்குவதால் அங்கு குழந்தைகள் பூங்கா, பரிசல் பயணம், சோலார் படகு பயணம் என பல்வேறு புதிய திட்டங்களை வனத்துறை அறிமுகப்படுத்தி வருகிறது. ஆனால் மணிமுத்தாறு அருவிக்கு செல்லும் 6.6 கிமீ சாலை மிகவும் மோசமாக காணப்பட்டதால், பொதுமக்களால் குளிக்க கூட செல்ல முடியவில்லை. அங்கு ரூ.1.8 கோடி செலவில் புதிய சாலையை அமைக்கிறோம் எனக்கூறி அருவிக்கான சுற்றுலா போக்குவரத்தை வனத்துறை ஏற்கனவே தடை செய்திருந்தது.

சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்வது மாதக்கணக்கில் தடைப்பட்டதால், அவர்களும் அதிருப்தியில் இருந்தனர். மணிமுத்தாறு சாலை பணிகள் தாமதம் காரணமாக மனித உரிமைகள் ஆணையத்தின் கண்டனத்திற்கும் வனத்துறை உள்ளாகியது. இந்நிலையில் பொங்கலையொட்டி 4 தினங்களுக்கு மட்டும் மணிமுத்தாறு அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் திட்டக்குழுவிடம் தேவையான பணத்தை பெற்று கடந்த மாத இறுதியில் சாலை சீரமைப்பு பணிகளை வனத்துறை ெதாடங்கியது. சாலையில் கிடந்த ஜல்லிகளை சீராக்கி, நேர்த்தி செய்யும் பணிகள் நடந்தன. அதை தொடர்ந்து நேற்று முதல் அங்கு தார் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னமும் ஒரு வார காலத்தில் பணிகள் நிறைவு பெறும் என கூறப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் போக்குவரத்து தொடங்கப்படும் என தெரிகிறது. சுமார் ஓராண்டுக்கு பின்னர் மணிமுத்தாறு அருவிக்கு மீண்டும் போக்குவரத்து ெதாடங்க உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags : Tar Setting Interview , Manimuthar, Falls Road, Dhar, completed
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...