×

விபத்துகளை குறைக்க ரயில்வே பாதுகாப்பு பிரிவுகளில் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை தேவை: டிஆர்இயூ கோரிக்கை

மன்னார்குடி: ரயில்வேயில் நடப்பு 2019-20ம் நிதியாண்டு ரயில் விபத்துகள் மிகவும் குறைந்து இருப்பதாகவும், இந்திய ரயில்வே வரலாற்றில் உயிர் இழப்புகள் இல்லாத ஆண்டு என்றும் தொடர்ந்து செய்திகள் வெளி வருகின்றன. ரயில் விபத்துகள் முற்றிலும் குறைந்து விட்டனவா? நடப்பு நிதியாண்டு நடந்த விபத்துகளின் விவரங்கள் என்ன? உயிர் இழப்புகள் உண்டா? விபத்துக்கான இழப்பீடு ஏதேனும் வழங்கப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் பதிலளிக்கையில், நடப்பு நிதியாண்டு கடந்த ஆண்டுக்கு நிகரான விபத்துகள் நடந்து உள்ளன. உயிர் இழப்புகள் ஏற்பட்டு நஷ்ட ஈடும் வழங்கப் பட்டு உள்ளது என்றார்.மேலும் அவர் கூறியது, இந்திய ரயில்வேயில் 1961ம் ஆண்டு தான் மிக அதிக விபத்துகள் நடந்தன. நடந்த விபத்துகள் 2131. அதில் 130 ரயில்கள் நேருக்கு நேர் மோதியது. 1415 தடம் புரண்டது. 405 தீ விபத்துகள். 181 கேட் விபத்துகள். நான்கு இலக்கத்தில் இருந்த ரயில் விபத்துகள் எண்ணிக்கை நிதியாண்டு 1982-83 முதல் நிதியாண்டு 2016-17 வரையிலான 35 ஆண்டுகள் மூன்று இலக்கத்தில் நீடித்து வந்தது. இந்த கால கட்டத்தில் ஆண்டு விபத்துகள் எண்ணிக்கை 796 இல் இருந்தது படிபடியாக குறைந்து 106 ஐ எட்டியது. கடந்த 60 ஆண்டுகளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் நடந்து உள்ளன.கடந்த 2017-18ம் நிதியாண்டில் விபத்துகள் எண்ணிக்கை முதன் முறையாக இரட்டை இலக்கத்தில் முடிந்தது. நடந்த விபத்துகள் 72. அதில் 3 மோதல், 53 தடம் புரண்டது, 3 தீ விபத்து மற்றும் 13 கேட் விபத்துகள். ரயில் விபத்துகளில் 2017-18 நிதியாண்டு உயிர் இழந்தவர்கள் 97 பேர். காயம் அடைந்தவர்கள் 182 பேர். இதற்காக ரயில்வே தந்த இழப்பீடு தொகை ரூ. 1 கோடியே 29 லட்சத்து 13 ஆயிரம் ஆகும்.

கடந்த 2018-19ம் நிதியாண்டு ரயில் விபத்துகள் எண்ணிக்கை 59 ஆக மேலும் குறைந்தது. அதில் 46 தடம் புரண்டது. 6 கேட் விபத்துகள், 6 தீ விபத்துகள் மற்றும் இதர வகை விபத்து ஒன்று. மோதல் ஏதுவும் இல்லை. உயிர் இழந்தவர்கள் 18 பேர். இழப்பீடு வழங்கியது. ரூ.4 கோடியே 96 லட்சத்து 52 ஆயிரம் ஆகும்.நடப்பு 2019-20ம் நிதியாண்டில் எப்ரல் 1 முதல் டிசம்பர் 31 முடிய உள்ள மூன்றாவது காலாண்டுக்குள் ( 9 மாதங்களில்) 50 விபத்துகள் ரயில்வேயில் நடந்து உள்ளன. அதில் 4 மோதல், 37 தடம் புரண்டது, ஒரு கேட் விபத்து, 7 தீ விபத்து, ஒரு இதர விபத்து. கடந்த 2018-19ம் நிதியாண்டு இதே காலகட்டத்தில் 47 விபத்துகள் மட்டுமே நடந்து இருந்தன.நடப்பு நிதியாண்டில் வட கிழக்கு ரயில்வே மற்றும் தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் எந்த விபத்துகளும் நடக்கவில்லை. வடக்கு ரயில்வேயில் அதிகபட்சமாக 8 விபத்துகளும் , மத்திய ரயில்வேயில் 6 விபத்துகள் நடந்துள்ளன. தெற்கு ரயில்வே கணக்கில் ஒரு தடம் புரண்ட விபத்து மட்டுமே. கடந்த நிதியாண்டை விட 5 தீ விபத்துகளும், 4 மோதல் விபத்துகளும் கூடுதலாக பதிவாகி இருக்கிறது. நடப்பு நிதியாண்டில் இதுவரை ஒரே ஒரு கேட் விபத்து மட்டும் நடந்தது பெரிய சாதனையே.

கடந்த பிப்ரவரி 5 ம் தேதி பாராளுமன்ற உறுப்பினர் ஜஸ்பீர் சிங்கில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு ரயில்வே அமைச்சர் பீயூஸ் கோயல் பதில் அளிக்கையில், நடப்பு 2019-20 நிதியாண்டு ஜனவரி 31ம் தேதி வரை ரயில் விபத்துகளில் உயிர் இழந்தவர்கள் 7 பேர். வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகை ரூ.2 கோடியே 80 லட்சத்து 81 ஆயிரத்து 205 என தெரிவித்து உள்ளார்.வளர்ந்த நாடுகளுக்கு இணையாண நவீன சிக்னல் முறை, நவீன ரக இன்ஜின்கள், பெட்டிகள், உள்நாட்டு தொழில் நுட்பங்கள் மற்றும் கட்டமைப்பு துணையுடன் விபத்துகள் கட்டுப்படுத்தி இருப்பதில் பாதுகாப்பு பிரிவு ஊழியர்களின் பணி மகத்தானது. அதே வேளையில் பாதுகாப்பு பிரிவுகளில் பணியாளர்கள் பற்றாக்குறை இல்லாமல் இருப்பது அவசியம். எனவே பாதுகாப்பு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்ப துரித நடவடிக்கை தேவை. இவ்வாறு மனோகரன் கூறினார்.

கடந்த பிப்ரவரி 5 ம் தேதி பாராளுமன்ற உறுப்பினர் ஜஸ்பீர் சிங்கில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு ரயில்வே அமைச்சர் பீயூஸ் கோயல் பதில் அளிக்கையில், நடப்பு 2019-20 நிதியாண்டு ஜனவரி 31ம் தேதி வரை ரயில் விபத்துகளில் உயிர்  இழந்தவர்கள் 7 பேர். வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகை ரூ.2 கோடியே 80 லட்சத்து  81 ஆயிரத்து 205 என தெரிவித்து உள்ளார்.

Tags : railway safety units ,accidents , Railway safety ,reduce ,fill workspace, DREU request
× RELATED திருக்கோவிலூர் அருகே இருவேறு...